1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் – இம்
மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே
காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்
பல்லவி
ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே — ஆனந்தமே
3. அள்ளித் தூவிடும்விதை சுமந்து செல்கின்றோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் — ஆனந்தமே
4. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே – இக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார் — ஆனந்தமே
Motcha Yaathrrai Selgirom Lyrics in English
1. motcha yaaththirai selkintom maelokavaasikal – im
maaya lokam thaanntiyae em veedu thontuthae
kadanthu selkintom karaiyin oramae
kaaththiruntha raajjiyam kanndataivom
pallavi
aananthamae aa aananthamae
aanndavarudan naam entum aaluvom
aathi murpithaakkalodu thootharumaay
aarpparippudan kooti vaaluvom
2. saththiya suvisesham eduththuraiththumae – tham
niththiya iraajjiyam makkalai aayaththamaakkavae
thaesamengumae alainthu selkirom
naesar Yesu vaakkuraikal nampiyae — aananthamae
3. allith thoovidumvithai sumanthu selkintom tham
annnal Yesuvin samookam munnae selluthae
kannnneer yaavumae kataisi naalilae
karththarae thutaiththu emmaith thaettuvaar — aananthamae
4. karththar em ataikkalam kavalai illaiyae – ik
kattu thunpa naeramo kalakkamillaiyae
kashdam neekkuvaar kavalai pokkuvaar
kaividaamal niththamum nadaththuvaar — aananthamae
PowerPoint Presentation Slides for the song Motcha Yaathrrai Selgirom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் இம் PPT
Motcha Yaathrrai Selgirom PPT