இயேசுவின் நாமம் இன்ப நாமம்
வல்லமையுள்ள நாமம் – அந்த
நாமத்திலே துதி பாடிடுவோம் – 2
கன மகிமையை செலுத்திடுவோம்
1. இயேசுவின் நாமமின்றி
வேறு நாமத்தில் மீட்பில்லையே
அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே
நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே
2. மகிழ்ச்சிக் குரலெழுப்பி
மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
எக்காளத்தோடும் கைத்தாளதோடும்
நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
3. தாய் என்னை மறந்தாலும்
அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்
என்னை நினைத்துக் கொள்ள
என் நாமத்தையே
அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார்
4. எக்காளம் முழங்கிடவே
வான மேகங்கள் நடுவினிலே – அவர்
மகிமை யோடும் வான தூதரோடும்
இயேசு இராஜாதி ராஜன் வருவார்
Iyaesuvin Naamam PowerPoint
இயேசுவின் நாமம் இன்ப நாமம்
இயேசுவின் நாமம் இன்ப நாமம் PPT
Download Iyaesuvin Naamam Tamil PPT