Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உதவி செய்தருளே

பல்லவி
உதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர் யாம்
உதவி செய்திடவே.

அனுபல்லவி

உதவி செய்தருள் மோட்ச
உசிதக் கோனே! நீ பூவில்
பதவி தந்திட வந்த போதினில்
பலருக்குதவின பான்மை போலவே. – உதவி

சரணங்கள்

1. ஒருவரொருவர்க்காய்-சிலுவை தூக்க
ஒத்தாசை தருவாய்!
தருண நேச சகாயம் சகலர்க்கும் புரிய
சகோதரன் படும் கஷ்டங் கவலையில்
சன்மனத்தொடு பங்கு பெற்றிட. – உதவி

2. உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள்
ஒன்றாய்ப் பொருந்தவே,
எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட,
எந்தையே! உனையருகி நெருங்கிட,
உன்தயை செயல் தந்து மேற்பட. – உதவி

3. பிரியாமல் உனையே-பற்ற எமக்குப்
பெலன் தா! நீ துணையே!
நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை
நினது சீடர்கள் பெறவே கிருபைசெய்!
நிதமு மதிலே மிக வுய்திடவே – உதவி

4. மாசற்ற பளிங்காய்-ஒளிருமுன்
மாணன்பு மிகவாய்,
ஆசற்ற குணமனி கோர்க்கும் பொற் சரடதே!
அழிவிலாததை எமக்குள் அணிந்திட,
ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட. – உதவி

Uthavi Seitharulae – உதவி செய்தருளே Lyrics in English

Pallavi uthavi seytharulae!-oruvarkkoruvar yaam uthavi seythidavae. Anupallavi uthavi seytharul motcha usithak konae! Nee poovil pathavi thanthida vantha pothinil palarukkuthavina paanmai polavae. – uthavi saranangal 1. Oruvaroruvarkkaay-siluvai thookka oththaasai tharuvaay! Tharuna naesa sakaayam sakalarkkum puriya sakotharan padum kashdang kavalaiyil sanmanaththodu pangu pettida. – uthavi 2. Unnanpu thodavae-emmullangal ontayp porunthavae, ennaalum piranpaal yaam aekiyae kittida, enthaiyae! Unaiyaruki nerungida, unthayai seyal thanthu maerpada. – uthavi 3. Piriyaamal unaiyae-patta emakkup pelan thaa! Nee thunnaiyae! Niraivaay uniliruntha parivaana anpin sinthai ninathu seedarkal peravae kirupaisey! Nithamu mathilae mika vuythidavae – uthavi 4. Maasatta palingaay-olirumun maananpu mikavaay, aasatta kunamani korkkum por saradathae! Alivilaathathai emakkul anninthida, aarnthun sinthaiyai naernthu seythida. – uthavi

PowerPoint Presentation Slides for the song Uthavi Seitharulae – உதவி செய்தருளே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதவி செய்தருளே PPT
Uthavi Seitharulae PPT

உதவி யாம் பல்லவி செய்தருளேஒருவர்க்கொருவர் செய்திடவே அனுபல்லவி செய்தருள் மோட்ச உசிதக் கோனே பூவில் பதவி தந்திட போதினில் பலருக்குதவின பான்மை போலவே சரணங்கள் ஒருவரொருவர்க்காய்சிலுவை English