Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வான நகரதின் மேன்மையென

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்

சரணங்கள்

பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான

அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான

அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் – வான

நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும்
ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள- வான

Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென Lyrics in English

vaana nakarathin maenmaiyena soluvom kana
valan nalavarukkarul

saranangal

paanolirathnangal asthipaaramaan thiruvaasalkal
panniru muththukal theru ponninmayamae
thaenilum mathuram thelivir palingathaana aarum
jeevatharuvum irukkum sepparum alakathaana – vaana

anguNnoy thunpam visaaram akramam kannnneer thariththiram
arpamu miruppathillai sorpamaakilum
pongiyae muchchaththurukkal porinuk kiluppathillai
punnnniyanaar sonnathiru unnatha erusalaiyaam – vaana

annathark kutikal vennmaiyaana alangaaramaana
archchaya uduppu siramaanathir kireedam
mannavar polae anninthu makimaiyi naasanaththil
vaaymaiyaaka veettiruppar thooymaiyaana antha nal – vaana

naeyamurpithaakkal theerkkar ninmalan apposthalarkal
neethimaankal ellavarum thoothar nallorum
oyvathintith thothra geetha uchchithath thonimulakki
unnathanaip pottuvaarkal pannarum sirappathulla- vaana

PowerPoint Presentation Slides for the song Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வான நகரதின் மேன்மையென PPT
Vaana Nagarathin Meanmaiyena PPT

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன வலன் நலவருக்கருள் சரணங்கள் பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான English