வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்
சரணங்கள்
பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான
அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான
அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் – வான
நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும்
ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள- வான
Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென Lyrics in English
Vaana nakarathin maenmaiyena soluvom kana valan nalavarukkarul saranangal paanolirathnangal asthipaaramaan thiruvaasalkal panniru muththukal theru ponninmayamae thaenilum mathuram thelivir palingathaana aaraுm jeevatharuvum irukkum sepparum alakathaana – vaana anguNnoy thunpam visaaram akramam kannnneer thariththiram arpamu miruppathillai sorpamaakilum pongiyae muchchaththurukkal porinuk kiluppathillai punnnniyanaar sonnathiru unnatha erusalaiyaam – vaana annathark kutikal vennmaiyaana alangaaramaana archchaya uduppu siramaanathir kireedam mannavar polae anninthu makimaiyi naasanaththil vaaymaiyaaka veettiruppar thooymaiyaana antha nal – vaana naeyamurpithaakkal theerkkar ninmalan apposthalarkal neethimaankal ellavarum thoothar nallorum oyvathintith thothra geetha uchchithath thonimulakki unnathanaip pottaுvaarkal pannarum sirappathulla- vaana
PowerPoint Presentation Slides for the song Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென PPT
Vaana Nagarathin Meanmaiyena PPT

