பல்லவி
தந்தானைத் துதிப்போமே – தேவ
தாசரே கவி பாடிப் பாடி
அனுபல்லவி
விந்தையாய் நமக்கனந் தனந்தமான
விள்ளற் கரியதோர் நன்மை மிக மிக
சரணங்கள்
1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து
ஐய னேசுக் குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே – நாமும் – தந்
2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனாமாரி போற் பெய்துமே – தந்
3. சுத்தாங்கத்து நற் சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தமின்
இரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர் வரம் – தந்
4. தூரந் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கி எடுத்துக் கரத்தினி லேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து உனை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னே! – தந்
Thanthanai Thuthipome Salvation Army Version – தந்தானைத் துதிப்போமே Lyrics in English
pallavi
thanthaanaith thuthippomae – thaeva
thaasarae kavi paatip paati
anupallavi
vinthaiyaay namakkanan thananthamaana
villar kariyathor nanmai mika mika
saranangal
1. oyyaaraththuch seeyonae – neeyum
meyyaakavae kalikoornthu naernthu
aiya naesuk kunin kaiyaik kooppith thuthi
seykuvaiyae makil kolluvaiyae – naamum – than
2. kannnnaarak kaliththaayae – nanmaik
kaatchiyaik kanndu rusiththup pusiththu
ennnuk kadangaatha eththanaiyo nanmai
innumunmaer sonaamaari por peythumae – than
3. suththaangaththu nar sapaiyae – unai
muttaாyk kollavae alainthu thirinthu
saththuk kulainthunaich sakthiyaakkath thamin
iraththaththaich sinthi eduththu uyir varam – than
4. thooran thirintha seeyonae – unaith
thookki eduththuk karaththini laenthi
aarangal pootti alangariththu unai
aththan manavaatti yaakkinathu ennae! – than
PowerPoint Presentation Slides for the song Thanthanai Thuthipome Salvation Army Version – தந்தானைத் துதிப்போமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தந்தானைத் துதிப்போமே PPT
Thanthanai Thuthipome Salvation Army Version PPT