ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.
அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.
அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை.
ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன்கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.
பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக.
If | אִֽם | ʾim | eem |
certainly be | הִמָּצֵא֩ | himmāṣēʾ | hee-ma-TSAY |
found in | תִמָּצֵ֨א | timmāṣēʾ | tee-ma-TSAY |
his | בְיָד֜וֹ | bĕyādô | veh-ya-DOH |
hand theft the | הַגְּנֵבָ֗ה | haggĕnēbâ | ha-ɡeh-nay-VA |
ox, | מִשּׁ֧וֹר | miššôr | MEE-shore |
be it whether or | עַד | ʿad | ad |
ass, | חֲמ֛וֹר | ḥămôr | huh-MORE |
or | עַד | ʿad | ad |
sheep; | שֶׂ֖ה | śe | seh |
alive, | חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM |
double. he shall | שְׁנַ֖יִם | šĕnayim | sheh-NA-yeem |
restore | יְשַׁלֵּֽם׃ | yĕšallēm | yeh-sha-LAME |