Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வந்தே கடைக்கண் பாருமேன்

பல்லவி

வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே,
வந்தே கடைக்கண் பாருமேன்.

சரணங்கள்

1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி,
எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. – வந்தே

2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே;
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! – வந்தே

3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ!
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, – வந்தே

4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா! – வந்தே

5. மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்;
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன். – வந்தே

6. எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்?
அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி. – வந்தே

7. வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே. – வந்தே

Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன் Lyrics in English

pallavi

vanthae kataikkann paarumaen,-sarvaesuranae,
vanthae kataikkann paarumaen.

saranangal

1. vanthae kataikkann paarum maanidar meethirangi,
enthaa, thuyaram yaavum evvithamum neekka. – vanthae

2. kollai Nnoy mikuththathin kodumai perukkamaachchaே;
vallalun sakaayaththaal maattum karunnaith thaevae! – vanthae

3. ennnnaa vaelai vaalarum iranthuporaar, aiyo!
kannnneer soriyummaanthar kalakkam anaiththumpokka, – vanthae

4. engae virain thoduvom, iraivaa? umai allaamal
engal thanjam vaeraarum illai; saranam, aiyaa! – vanthae

5. maanidar thuyaraththaal marukiyae thirikintom;
aen inthak kasthi yaavum enthaiyae? kannpaarumaen. – vanthae

6. entha mattum inNnoyaal eenar emai vaathippeer?
anthi, santhi alarum aathular meethirangi. – vanthae

7. vaarum, karunnaakaraa; vanthae kollai Nnoyathaith
theerum ivvaelai thaanae theenar emmeethininte. – vanthae

PowerPoint Presentation Slides for the song Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வந்தே கடைக்கண் பாருமேன் PPT
Vanthae Kadaikan Paarumean PPT

வந்தே கடைக்கண் மானிடர் மீதிரங்கி யாவும் கொள்ளை பல்லவி பாருமேன்சர்வேசுரனே பாருமேன் சரணங்கள் பாரும் எந்தா துயரம் எவ்விதமும் நீக்க நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே English