பல்லவி
வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே,
வந்தே கடைக்கண் பாருமேன்.
சரணங்கள்
1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி,
எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. – வந்தே
2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே;
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! – வந்தே
3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ!
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, – வந்தே
4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா! – வந்தே
5. மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்;
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன். – வந்தே
6. எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்?
அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி. – வந்தே
7. வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே. – வந்தே
Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன் Lyrics in English
Pallavi vanthae kataikkann paarumaen,-sarvaesuranae, vanthae kataikkann paarumaen. Saranangal 1. Vanthae kataikkann paarum maanidar meethirangi, enthaa, thuyaram yaavum evvithamum neekka. – vanthae 2. Kollai Nnoy mikuththathin kodumai perukkamaachchaே; vallalun sakaayaththaal maattaுm karunnaith thaevae! – vanthae 3. Ennnnaa vaelai vaalarum iranthuporaar, aiyo! Kannnneer soriyummaanthar kalakkam anaiththumpokka, – vanthae 4. Engae virain thoduvom, iraivaa? Umai allaamal engal thanjam vaeraarum illai; saranam, aiyaa! – vanthae 5. Maanidar thuyaraththaal maraுkiyae thirikintom; aen inthak kasthi yaavum enthaiyae? Kannpaarumaen. – vanthae 6. Entha mattum inNnoyaal eenar emai vaathippeer? Anthi, santhi alaraுm aathular meethirangi. – vanthae 7. Vaarum, karunnaakaraa; vanthae kollai Nnoyathaith theerum ivvaelai thaanae theenar emmeethininte. – vanthae
PowerPoint Presentation Slides for the song Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன் PPT
Vanthae Kadaikan Paarumean PPT

