Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வளர்ந்தே பெருகுக என்றே

1. வளர்ந்தே பெருகுக என்றே – உளம்
மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர்
தளர்ந்தே சோர்வுறும் கால்களே – பலம்
அடைந்தே நடந்திட வாரீர்

பல்லவி

பெருகுவோம் – வளர்ந்து
பெருகுவோம் – தேவன்
அருளும் ஆவியின்
அருமையாம் ஒளியில் – வளர்ந்தே பெருகுவோம்

2. இருநூறாண்டுகள் இறைவன் – நெல்லைத்
திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார்
வரும்பல ஆண்டுகள் எல்லாம் – இன்னும்
பெருகிட அருள்வரம் ஈவார்

3. பிரிவினை எழுந்திடும் நேரம் – நம்மைக்
கரிசனை யோடவர் இணைத்தார்
உரிமையாய் ஒருமையில் வளர – அவர்
பரிவுடன் தினம் நடத்திடுவார்

4. தூய்மையில் தவறிய வேளை – நம்மைத்
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு மேலும் – நம்மைத்
தாங்கியே தினம் அணைத்திடுவார்

5. ஒளியென உலகினில் வந்தார் – நம்மை
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாக – என்றும்
ஒளிர்ந்திட ஓடியே வாரீர்

வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe peruguga entre

வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe Peruguga Entre Lyrics in English

1. valarnthae perukuka ente – ulam
makilnthae pukalnthida vaareer
thalarnthae sorvurum kaalkalae – palam
atainthae nadanthida vaareer

pallavi

perukuvom – valarnthu
perukuvom – thaevan
arulum aaviyin
arumaiyaam oliyil – valarnthae perukuvom

2. irunooraanndukal iraivan – nellaith
thiruchchapai valarnthida naernthaar
varumpala aanndukal ellaam – innum
perukida arulvaram eevaar

3. pirivinai elunthidum naeram – nammaik
karisanai yodavar innaiththaar
urimaiyaay orumaiyil valara – avar
parivudan thinam nadaththiduvaar

4. thooymaiyil thavariya vaelai – nammaith
thooyavar thookkiyae eduththaar
thaaymaiyin karam konndu maelum – nammaith
thaangiyae thinam annaiththiduvaar

5. oliyena ulakinil vanthaar – nammai
oliyena vilangida alaiththaar
olitharum theepangalaaka – entum
olirnthida otiyae vaareer

valarnthae perukuka ente – Valaranthe peruguga entre

PowerPoint Presentation Slides for the song வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe Peruguga Entre

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வளர்ந்தே பெருகுக என்றே PPT
Valaranthe Peruguga Entre PPT

வளர்ந்தே வாரீர் பெருகுவோம் பெருகுக என்றே தினம் நம்மைத் ஒளியென உளம் மகிழ்ந்தே புகழ்ந்திட தளர்ந்தே சோர்வுறும் கால்களே பலம் அடைந்தே நடந்திட பல்லவி வளர்ந்து English