Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரா வினை வந்தாலும்

பல்லவி

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

சரணங்கள்

1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்,
சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. – வாரா

2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. – வாரா

3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. – வாரா

4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. – வாரா

5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. – வாரா

6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! – வாரா

Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் Lyrics in English

Pallavi vaaraa vinai vanthaalum soraathae manamae; valla Kristhunakku nalla thaarakamae. Saranangal 1. Sooran sathiththun meethu valai veesinaalum, soraathae, aesuparan thanjam vidaathae. – vaaraa 2. Ulakam ethirththunakku malaivuseythaalum, uraுthivittayaraathae, neri thavaraathae. – vaaraa 3. Petta pithaappol un kuttam ennnnaarae; pillai aakil avar thallividaarae. – vaaraa 4. Than uyir eenthitta un yaesunaathar thalluvaro? Anpu kollavar meethae. – vaaraa 5. Maranam uraுkinta tharunam vanthaalum, marula vilaathae, nal arulai vidaathae. – vaaraa 6. Vaiyakamae unakkuyya or nilaiyo? Vaanavanai muttaுm thaan ataivaayae! – vaaraa

PowerPoint Presentation Slides for the song Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரா வினை வந்தாலும் PPT
Vaara Vinai Vanthalum PPT

வாரா வந்தாலும் சோராதே விடாதே பல்லவி வினை மனமே வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே சரணங்கள் சூரன் சதித்துன் வலை வீசினாலும் ஏசுபரன் தஞ்சம் உலகம் English