வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும்
ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி!
மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத்
தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி!
சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள்
மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி!
துன்பந்துயரம் சோர்வினில் அடியரை
அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி!
அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து
தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி!
பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச்
சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி!
வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum PowerPoint
வானமும் புவியும் வழங்கு
வானமும் புவியும் வழங்கு PPT
Download வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum Tamil PPT