Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

1. வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!
வளம்நிறை ஆண்டவரே!-தேவரீர்,
ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை
ஈந்ததற்தாய்த் தோத்ரம்!

2. பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர்,
கோவத்துக்கேயுரியர்,-வறியர்
ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த
ஆண்டவரே, தோத்ரம்!

3. வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை
வருடநாற்பது காத்தீர்!-அந்த
வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய
வானவரே, தோத்ரம்!

4. ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை
அமர்த்திப் போஷித்தீர்;-ஐயா!
போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்;
புண்ணியரே, தோத்ரம்!

5. பெரிய உம்நாமம் பேருலகோங்க,
வறியவர் மிடியகல,-இவ்வீவை
அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும்
நெறியெமக் கீத்தருள்வீர்!

6. திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்
தேவரீர் பயிர்க்காரர்,-திருவே,
ஆவியின் மழையால் ஆக்கிடும், எம்மை
அழகிய கதிர்மணியாய்!

Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே Lyrics in English

1. vaanamum poomiyum vakiththidunthaevae!
valamnirai aanndavarae!-thaevareer,
eenaraam emmael irangi ivvaruppai
eenthatharthaayth thothram!

2. paavamnirainthor, paaththiramattaோr,
kovaththukkaeyuriyar,-variyar
aayinar emakkivvuruppai yaliththa
aanndavarae, thothram!

3. vaana mannaavai varushith thisraelai
varudanaarpathu kaaththeer!-antha
vallamai emakkiv varudamungaattiya
vaanavarae, thothram!

4. ainthappangaொnntai yaayirampaerai
amarththip poshiththeer;-aiyaa!
pontha em pasiyum puramurachcheytheer;
punnnniyarae, thothram!

5. periya umnaamam paerulakonga,
variyavar mitiyakala,-ivveevai
arivudankaaththae arumaiyaay aalum
neriyemak geeththarulveer!

6. thiruchchapaippannnnai thikalpayir naangal
thaevareer payirkkaarar,-thiruvae,
aaviyin malaiyaal aakkidum, emmai
alakiya kathirmanniyaay!

PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானமும் பூமியும் வகித்திடுந்தேவே PPT
Vaanamum Boomiyum Vakithiduvey PPT

தோத்ரம் வானமும் பூமியும் வகித்திடுந்தேவே வளம்நிறை ஆண்டவரேதேவரீர் ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்தாய்த் பாவம்நிறைந்தோர் பாத்திரமற்றோர் கோவத்துக்கேயுரியர்வறியர் ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த ஆண்டவரே வான English