Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானராச்சியம் வந்ததோ

பல்லவி

வானராச்சியம் வந்ததோ கோகோ!
மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ!

அனுபல்லவி

ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ்
ஞான காட்சியர் தோன்றினார்.- வான

சரணங்கள்

1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான

2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர்
பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர்
சுந்தரப் பரிபூரணர் காரணர்
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.- வான

3.அண்ணலார் பாத ரட்சையின் வாரையே
அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்.- வான

4.மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார்.- வான

5.தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது
துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே
தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே.- வான

Vaana Ratchiyam Vanthatho – வானராச்சியம் வந்ததோ Lyrics in English

pallavi

vaanaraachchiyam vanthatho koko!
maantharae thavamseyyum o koko!

anupallavi

aana saatchi thiyaanasootchi meynj
njaana kaatchiyar thontinaar.- vaana

saranangal

1.mannavan kiristhaathipan vanthaar
vaakurap pavamae olinthidavae kunappaduveerkalae
ennilum periyaar valiyaar avar
innilaththitai maevinaar uyar unnathak kirupai aalamae.- vaana

2.pinthi vanthavar munthi irunthavar
paesarum porulaar parampara naesar nam karunnaamparar
suntharap paripooranar kaaranar
jothisontha anaathi mainthan im maathiranthanil maevinaar.- vaana

3.annnalaar paatha ratchaைyin vaaraiyae
avilkka vaaymaiyil edukka allathu sumakkap paaththiran alla naan
thinnnam en mulukko jalaththeerththamae
theeyinaalum aroopiyaalum snaanamae avar eekuvaar.- vaana

4.maraththin vaer arukae mun kodaaliyum
vaiththirukkuthu paththiraththudan echcharikkai vidaathaeyum
varaththil narkani thaan tharukaath tharu
vaiththidak kida vetti mikkalal akkinikkiraiyaakkuvaar.- vaana

5.thoottukkootai karaththil irukkuthu
thuraiyinil thamathuriya narkalam ara vilakki aruthiyilae
thaettak kothumai kaeyaththil serththumae
theeyathurppathar aanathaith thalalaal erippar innaeramae.- vaana

PowerPoint Presentation Slides for the song Vaana Ratchiyam Vanthatho – வானராச்சியம் வந்ததோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானராச்சியம் வந்ததோ PPT
Vaana Ratchiyam Vanthatho PPT

வான கோகோ மேவினார் பல்லவி வானராச்சியம் வந்ததோ மாந்தரே தவம்செய்யும் அனுபல்லவி ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ் ஞான காட்சியர் தோன்றினார் சரணங்கள் மன்னவன் English