🏠  Lyrics  Chords  Bible 

உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு PPT

உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு
என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கெட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார்
1. இல்லையென்ற நிலை வந்ததோ
இருப்பதுபோல் அழைக்கும் தேவன்
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
2. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
3. நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
4. மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளி வரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
5. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
6. செங்கடல் உனக்கு முன்னானதோ
சேனைகளெல்லாம் பின்னானதோ
சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
சேதமின்றி காப்பார் கலங்காதே


Unakkule Irukindra Unn Yesu PowerPoint



உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு

உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு PPT

Download Unakkule Irukindra Unn Yesu Tamil PPT