Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

பல்லவி

சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில்
சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித்
துயர் தீர வேண்டினரே.

அனுபல்லவி

இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின்
இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். – சூரி

சரணங்கள்

1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது,
நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன,
வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம்,
தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். – சூரி

2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும்,
துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும்,
கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை கூர்வாய்!
அஷ்டதிக்கும் ஆள்வோய், அபயம் அபயம் என்றோம். – சூரி

3. எளியோர் வறுமையில் இன்னருள் ஊற்றுவாய்,
விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய்,
வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய்,
பழி பாவம் துணிவோரைத் தடுத்தாண்டு மாற்றுவாய். – சூரி

4. சருவ சக்தி சதா காலமும் உனதல்லோ?
வருத்த மெல்லாம் ஓடும் வார்த்தை ஒன்று சொல்ல,
உரித்தாய்க் கரத்தினால் உன்னடியாரைத் தொடுவாயே,
கருகுங் கங்குலிலும் யாம் களிப்பாய்ச் சுகிப்போமே. – சூரி

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும் Lyrics in English

pallavi

sooriyan asthamiththirunndidum vaelaiyil
soolnthanar pinniyaalikal-unai nerungith
thuyar theera vaenntinarae.

anupallavi

innaeram unthayai thaedum ivvatiyaarin
innalellaam oda anpae unnarul eevaay. – soori

saranangal

1. paeyin akorathvam unaikkanndu paranthathu,
Nnoyum nirppanthamum nee thoda olinthana,
vaaykkum sukaanantham unai nampinorkkellaam,
thaayk karunnaiyutaiyoy, intum un thayai koorvaay. – soori

2. ishdarin thurokaththaal idar atainthulalvorum,
thushdar seythunpaththaal thayangith thavipporum,
kashdamellaam theernthu kalikkak karunnai koorvaay!
ashdathikkum aalvoy, apayam apayam entom. – soori

3. eliyor varumaiyil innarul oottuvaay,
vilippotiravir kannnneer viduvoraith thaettuvaay,
vali thappi alaivorai vali kaatti aattuvaay,
pali paavam thunnivoraith thaduththaanndu maattuvaay. – soori

4. saruva sakthi sathaa kaalamum unathallo?
varuththa mellaam odum vaarththai ontu solla,
uriththaayk karaththinaal unnatiyaaraith thoduvaayae,
karukung kangulilum yaam kalippaaych sukippomae. – soori

PowerPoint Presentation Slides for the song Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சூரியன் அஸ்தமித்திருண்டிடும் PPT
Sooriyan Asthamithirundirum PPT

சூரி கூர்வாய் அபயம் வழி பல்லவி சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள்உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே அனுபல்லவி இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் English