Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சொல்லிவந்துன் பாதம்

பல்லவி

சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும்
தூரமாகாதாள்வாய், நேசனே.

அனுபல்லவி

எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து
கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. – சொல்

சரணங்கள்

1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால்
இறையோனே காதில் நுழையாதோ?
திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி
சேர்க்க என்றனை அழையாயோ?
அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்;
விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். – சொல்

2. சந்ததம் உனையே நம்பினேன்,-சத்துருப்பேயின்
சற்பனையால் மனம் வெம்பினேன்.
சொந்தம் நான் உனக்கியம்பினேன்,-நினைக்காணாதே
துக்கமே விடத்ததும்பினேன்.
பந்தமாமெ வையும் மாளப் பற்றெலாமுன் பாதத்தேறச்
சிந்தை உன்னருளே வீறச் சீவன் முத்தி சேர்ந்தே யாறச் – சொல்

3. ஆரிடத்தென் குறை சொல்லுவேன்-ஈசா. வேறே
ஆரைத் தஞ்சமாகப் புல்லுவேன்?
சேரிடத் தெவ்விதம் சொல்லுவேன்?-முப்பகை செய்யும்
தீமையை எப்படிச் சொல்லுவேன்?
பாரிடத்து வந்த பாதா, பாக்ய வேதவாக்ய போதா,
சீரனைத் தினுக்கு மேதா, திவ்விய சற்குரு நாதா. – சொல்

சொல்லிவந்துன் பாதம் – Solli Vanthun Paatham Lyrics in English

pallavi

sollivanthun paatham pullinaen, paranae, neeyum
thooramaakaathaalvaay, naesanae.

anupallavi

elliyum alliyum nonthu yaan irangavae kasinthu
kallu manamum karainthu kaathal koorumae ukanthu. – sol

saranangal

1. irumpu nenjamum kulaiyaatho?-aelai kooppittal
iraiyonae kaathil nulaiyaatho?
thirumpi enthuyar kalaiyaayo?-un thiruvati
serkka entanai alaiyaayo?
arumpi vilung kannnneer aaraay, alaipuralum thanmai thaeraay;
virumpi nee vaa entu kaaraay, meyyane ninnarut paeraay. – sol

2. santhatham unaiyae nampinaen,-saththuruppaeyin
sarpanaiyaal manam vempinaen.
sontham naan unakkiyampinaen,-ninaikkaannaathae
thukkamae vidaththathumpinaen.
panthamaame vaiyum maalap pattelaamun paathaththaerach
sinthai unnarulae veerach seevan muththi sernthae yaarach – sol

3. aaridaththen kurai solluvaen-eesaa. vaerae
aaraith thanjamaakap pulluvaen?
seridath thevvitham solluvaen?-muppakai seyyum
theemaiyai eppatich solluvaen?
paaridaththu vantha paathaa, paakya vaethavaakya pothaa,
seeranaith thinukku maethaa, thivviya sarkuru naathaa. – sol

PowerPoint Presentation Slides for the song சொல்லிவந்துன் பாதம் – Solli Vanthun Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சொல்லிவந்துன் பாதம் PPT
Solli Vanthun Paatham PPT

சொல் பல்லவி சொல்லிவந்துன் பாதம் புல்லினேன் பரனே நீயும் தூரமாகாதாள்வாய் நேசனே அனுபல்லவி எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து கல்லு மனமும் கரைந்து English