Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சீர்கெட்ட பாவி ஆனேன்

சீர்கெட்ட பாவி ஆனேன்

பல்லவி

1. திருமுகத் தொளிவற்று, பெருவினைகளி;ல் உற்றுச்
சீர்கெட்ட பாவி ஆனேன், -நான்
ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட
ஊக்கம் அருள் பரனே.

2. துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல்
சோபிதம் தான் இழந்தேன் – பேய்ப்
பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப்
பாவிக் கிரங் கையனே.

3. பாதகர் மீதில் பரிதபியாமலும்
பாவம் பொறாமலும் நீ – சுத்த
நீதியை நோக்கில் உனது சமூகத்தில்
நிற்பவர் ஆர் துய்யனே?

4. தன் புண்ணியத்தால் எவனும் மன்னிப்புறத்
தக்கவன் இல்லை மெய்யாய் – எந்தை !
உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய்
உண்டு பொறுப் பெனக்கே

5. மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என்
வஞ்சக நெஞ்சதனை – நேராய்
விண்ணையே நோக்கிடப் பண் இறைவா உனை
வேண்டி மன்றாடுகின்றேன்.

6. மாறுபாடான இவ் வேழைக்கிரங்கி நீ
மன்னிப்பருள் வதன்றி – எனக்
காறுதலாக உனது நல் ஆவியை
அனுக்கிரகித் தாள் பரனே.

Seer Ketta Paavi Aanean – சீர்கெட்ட பாவி ஆனேன் Lyrics in English

seerketta paavi aanaen

pallavi

1. thirumukath tholivattu, peruvinaikali;l uttuch
seerketta paavi aanaen, -naan
oru mukamaay unathidam mananthirumpida
ookkam arul paranae.

2. thurichchaைyinaal en asuththam nirainthu nal
sopitham thaan ilanthaen – paeyp
pareetchaைyinaalum mayakkam ataiyum ip
paavik kirang kaiyanae.

3. paathakar meethil parithapiyaamalum
paavam poraamalum nee – suththa
neethiyai Nnokkil unathu samookaththil
nirpavar aar thuyyanae?

4. than punnnniyaththaal evanum mannippurath
thakkavan illai meyyaay – enthai !
un thayaiyaal un thiruchchuthan moolamaay
unndu porup penakkae

5. mannnnaiyae Nnokki ulantu thavikkum en
vanjaka nenjathanai – naeraay
vinnnnaiyae Nnokkidap pann iraivaa unai
vaennti mantadukinten.

6. maarupaadaana iv vaelaikkirangi nee
mannipparul vathanti – enak
kaaruthalaaka unathu nal aaviyai
anukkirakith thaal paranae.

PowerPoint Presentation Slides for the song Seer Ketta Paavi Aanean – சீர்கெட்ட பாவி ஆனேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சீர்கெட்ட பாவி ஆனேன் PPT
Seer Ketta Paavi Aanean PPT

English