Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிகரே இல்லாத சர்வேசா

பல்லவி

நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா

அனுபல்லவி

துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா

சரணங்கள்

1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே

2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே

3. பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே – நிகரே

4. தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் – நிகரே

5. கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே – நிகரே

6. ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே – நிகரே

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae Illatha Sarvesa Lyrics in English

pallavi

nikarae illaatha sarvaesaa
thikalum oli pirakaasaa

anupallavi

thuthipaatida Yesu naathaa
pathinaayiram naavukal pothaa

saranangal

1. thungan aesu mey parisuththarae
engal thaevanaith tharisikkavae
thuthikaludan kavikaludan
thooya thooyanai nerungiduvom – nikarae

2. kallum mannnum em kadavulalla
kaiyin siththiram theyvamalla
aaviyodum unnmaiyodum
aathi thaevanai vanangiduvom – nikarae

3. pon porulkalum alinthidumae
mannnum maayaiyum marainthidumae
ithinum vilai perum porulae
Yesu aanndavar thiruvarulae – nikarae

4. thaeva mainthanaay avathariththaar
paava sothanai madangatiththaar
manithanukkaay uyir koduththaar
maalum maantharai meetteduththaar – nikarae

5. konthalikkum alaikalaiyum
kaal mithikkum karththaravar
adangidumae athattidavae
akkarai naamum sernthidavae – nikarae

6. jeevan thanthavar mariththelunthaar
jeeva thaevanae uyirththelunthaar
marupatiyum varuvaenentar
maasanthosha naal nerungiduthae – nikarae

PowerPoint Presentation Slides for the song நிகரே இல்லாத சர்வேசா – Nigarae Illatha Sarvesa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிகரே இல்லாத சர்வேசா PPT
Nigarae Illatha Sarvesa PPT

நிகரே இயேசு மண்ணும் பல்லவி இல்லாத சர்வேசா திகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட நாதா பதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் துங்கன் ஏசு மெய் English