🏠  Lyrics  Chords  Bible 

நெருக்கடி வேளையில் பதில் அளித்து PPT

நெருக்கடி வேளையில் பதில் அளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
என்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
 
1.   நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் – 2
நன்றிப்பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக் கொள்வார் – 2
பிரியமாய் ஏற்றுக் கொள்வார்
        நெருக்கடி வேளையில் பதில் அளித்து
 
2.   உன்மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் – 2
உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் – 2
நிறைவேற்றி முடித்திடுவார்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து
 
3.   உனக்குவரும் வெற்றிபைக்கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் -2
நம்தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து
 
4.   இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் – 2
தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்
நிமிர்ந்து நின்றிடுவோம்
நெருக்கடி வேளையில் பதில் அளித்து


Nerukkati Vaelaiyil PowerPoint



நெருக்கடி வேளையில் பதில் அளித்து

நெருக்கடி வேளையில் பதில் அளித்து PPT

Download Nerukkati Vaelaiyil Tamil PPT