Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாட்சி போரை போரின்

1 மாட்சி போரை போரின் ஓய்வை
பாடு என்தன் உள்ளமே;
மாட்சி வெற்றி சின்னம் போற்றி
பாடு வெற்றி கீதமே;
மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
மாண்டு பெற்றார் வெற்றியே.

2 காலம் நிறைவேற, வந்தார்
தந்தை வார்த்தை மைந்தனாய்;
ஞாலம் வந்தார், வானம் நீத்தே
கன்னித் தாயார் மைந்தனாய்;
வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக
இருள் நீக்கும் ஜோதியாய்.

3 மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்
விட்டார் வீடு சேவைக்காய்!
தந்தை சித்தம் நிறைவேற்றி
வாழ்ந்தார்; தந்தை சித்தமாய்
சிலுவையில் தம்மை ஈந்தார்
தூய ஏக பலியாய்.

4 வெற்றி சின்ன சிலுவையே,
இலை மலர் கனியில்
ஒப்புயர்வு அற்றாய் நீயே!
மேலாம் தரு பாரினில்!
மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர்
தொங்கி மாண்டனர் உன்னில்.

5 பிதா சுதன் ஆவியான
தூயராம் திரியேகரே,
இன்றும் என்றும் சதா காலம்
மாட்சி ஸ்தோத்ரம் ஏற்பீரே;
மாட்சி ஸ்தோத்ரம் நித்திய காலம்
உன்னதத்தில் உமக்கே.

Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின் Lyrics in English

1 maatchi porai porin oyvai
paadu enthan ullamae;
maatchi vetti sinnam potti
paadu vetti geethamae;
maanthar meetpar kiristhu naathar
maanndu pettaாr vettiyae.

2 kaalam niraivaera, vanthaar
thanthai vaarththai mainthanaay;
njaalam vanthaar, vaanam neeththae
kannith thaayaar mainthanaay;
vaalnthaar theyva maanthanaaka
irul neekkum jothiyaay.

3 moontu paththu aanntin eettil
vittar veedu sevaikkaay!
thanthai siththam niraivaetti
vaalnthaar; thanthai siththamaay
siluvaiyil thammai eenthaar
thooya aeka paliyaay.

4 vetti sinna siluvaiyae,
ilai malar kaniyil
oppuyarvu attaாy neeyae!
maelaam tharu paarinil!
meetpin sinnam aanaay; meetpar
thongi maanndanar unnil.

5 pithaa suthan aaviyaana
thooyaraam thiriyaekarae,
intum entum sathaa kaalam
maatchi sthothram aerpeerae;
maatchi sthothram niththiya kaalam
unnathaththil umakkae.

PowerPoint Presentation Slides for the song Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாட்சி போரை போரின் PPT
Maatchi Poorai Poorin PPT

மாட்சி வெற்றி காலம் தந்தை பாடு சின்னம் மீட்பர் வந்தார் மைந்தனாய் வாழ்ந்தார் ஸ்தோத்ரம் போரை போரின் ஓய்வை என்தன் உள்ளமே போற்றி கீதமே மாந்தர் English