Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மானுவேல் தொண்டரே ஆர்ப்பரிந்து

மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்து
மகிழ்ந்து பூரிப்போம்

மானிலமீது சமாதானமா மென்ற
வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
நாடுவோம் – அதைத் தேடுவோம் – இனி
நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்

தீர்க்க ருரைப்படியே – உலகெங்கும்
தீங்கீலாக் காலம் வரும்
தாக்கும் படைக்கலங்கள் – கிருஷிகச்
சாதனமாகி விடும்
மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்
மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்
வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்
நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
நிலைத்து – அன்பு – வளர்த்துக் – கரங்
கொடுத்து – உற – வடுத்துமதிப்பர்

போன காலங்களிலே – நடந்திட்ட
பொல்லாங்கும் பாடுகளும்
ஈனத் துரோகங்களும் – விளைவித்த
ஈங்கிசை போதும் இனி
வானபரனின் மலரடிக் கண்ணுற்று
வல்ல பரிசுத்த் அன்பினாவி பெற்று
மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு
மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
மாட்சியாய் – அவர் – சாட்சியாய் – இந்த
மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே

சர்வ ஜனநேசம் – நிறைவுறத்
தாமதமானாலும்
கர்வம் பொறாமை பகை – தடை செய்யக்
காலம் நீடித்தாலும்,
அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால்
ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
இருளகல விடிவெள்ளி தோணுது
எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
யேசுவே – இக – மாசுடர் – அவர்
நேசமே – புவித் – தோஷமகற்றிடும்

Maanuvel Thondare Lyrics in English

Maanuvael thonndarae – aarpparinthu makilnthu poorippommaanilameethu samaathaanamaa menta vaanavar vaalththuvaraa thenanampum naanilamengum sakothara aikkiyam nannnum pakalarunnothayam aakuthae naaduvom – athaith thaeduvom – ini naamumuyarsi kaiyaaduvom paaduvomtheerkka ruraippatiyae – ulakengum theengaீlaak kaalam varum thaakkum pataikkalangal – kirushikach saathanamaaki vidum maakka lelaamorae thanthaiyin makkalaay mannan yaesuvukku lantana tholaraay vaakkuvaathangal valakkukal yuththangal neekki yinakkam poraுmai narkunangal nilaiththu – anpu – valarththuk – karang koduththu – ura – vaduththumathipparpona kaalangalilae – nadanthitta pollaangum paadukalum eenath thurokangalum – vilaiviththa eengisai pothum ini vaanaparanin malaratik kannnuttaு valla Parisuththa் anpinaavi pettaு maanuvaelae saiyar naamamae munnittu mattaுmavar seykai maathiri naam kattaு maatchiyaay – avar – saatchiyaay – intha mannnnilaththaar oththu vaalach sepiththumaesarva jananaesam – niraivurath thaamathamaanaalum karvam poraamai pakai – thatai seyyak kaalam neetiththaalum, arul nampikkai konndarpa menu nammaal aanathaich seykuvom munthoothar polavae irulakala vitivelli thonuthu engum naduppakal mangalanaal varum yaesuvae – ika – maasudar – avar naesamae – puvith – thoshamakattidum

PowerPoint Presentation Slides for the song Maanuvel Thondare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மானுவேல் தொண்டரே ஆர்ப்பரிந்து PPT
Maanuvel Thondare PPT

இனி காலம் மானுவேல் தொண்டரே ஆர்ப்பரிந்து மகிழ்ந்து பூரிப்போம்மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த்துவறா தெனநம்பும் நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே நாடுவோம் English