கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
1. கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே
2. செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றது ஏன்
3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா
4. உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால் நோய்கள் மறையுதையா
5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா
6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே
7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர்
கறையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்
8. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்
Kuutumae Ellaam Kuutumae PowerPoint
கூடுமே எல்லாம் கூடுமே
கூடுமே எல்லாம் கூடுமே PPT
Download Kuutumae Ellaam Kuutumae Tamil PPT