Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க

எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

பல்லவி
அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்

1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

Enthan Ullam Puthukaviyale Ponga Lyrics in English

Enthan ullam puthu kaviyaalae ponga Yesuvai paadiduvaen avar naamam oottaுnnda parimala thailam avaraiyae naesikkiraேn pallavi Alleluya thuthi Alleluya – enthan annnalaam Yesuvai paadiduvaen iththanai kirupaikal niththamum aruliya karththaraik konndaaduvaen – enthan ullam 1. Senta kaalam muluvathum kaaththaarae – or sethamum anukaamal sonthamaaka aaseer polinthenak kintum suka pelan aliththaarae – Alleluya – enthan ullam 2. Sila vaelai imaippoluthae tham mukaththai sirushtikar maraiththaarae kadungaோpam neekki thirumpavum enmael kirupaiyum polinthaarae – Alleluya – enthan ullam 3. Panja kaalam perukida naernthaalum thaam thanjamae aanaarae angum ingum Nnoykal paravi vanthaalum ataikkalam aliththaarae – Alleluya – enthan ullam 4. Kalippodu virainthaemmai serththida – en karththarae varuvaarae aavalodu naamum vaanaththai Nnokki anuthinamum kaaththiruppom – Alleluya – enthan ullam

PowerPoint Presentation Slides for the song Enthan Ullam Puthukaviyale Ponga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க PPT
Enthan Ullam Puthukaviyale Ponga PPT

எந்தன் உள்ளம் அல்லேலூயா காலம் அளித்தாரே புது கவியாலே போங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் பல்லவிஅல்லேலூயா துதி எந்தன்அண்ணலாம் இயேசுவை English