Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்தன் பரமகுரு செய்த

பல்லவி

என்தன் பரமகுரு செய்த உபகாரத்தை
ஏத்தித் துதிப்பேன் நானே

அனுபல்லவி

தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச்
சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான – என்

சரணங்கள்

1.வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத
மகிமைப்ர தாபம் மிகுத் தோன் – அதி
ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த
யாவும் நெறியில் பகுத்தோன்
மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின்
விளங்கும் அனந்த சுகத்தோன் – அக்கி
யானத் திருள் அகலத்தான் இப்புவியில் உற்ற
அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாத- என்

2.மிக்கப் பராபரனோ டொக்க ஒன்றித்திரந்த
முக்கியம் அனைத்தும் விடுத்து – ஏவை
மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில்
மனுடாவதாரம் எடுத்து
பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டரும்
பாடு பட்டுயிர் கொடுத்து – நரர்
அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து
அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து

3.பாவத் திகில் அறுத்துச்,சாபத்தையும் தொலைத்து
பகைஞன் வினையை நீக்கிக் – கொடும்
ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த
அடிமைகளைக் கைதூக்கி
தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத்
திருவுள மாய் உண்டாக்கி – நித்தம்
மாபத்தி ரமாய்ப் பிரதாபித் தனுக்ர கித்து
வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான

Enthan Parama Guru Seitha – என்தன் பரமகுரு செய்த Lyrics in English

pallavi

enthan paramakuru seytha upakaaraththai
aeththith thuthippaen naanae

anupallavi

thanthaip paranidaththaa nanthath thoni vilangach
saththamaaka ninta niththiya vasthuvaana – en

saranangal

1.vaanath thamalar senai kirakiththu mutiyaatha
makimaipra thaapam mikuth thon – athi
njaanaththudan ulakum, paramum, athil niraintha
yaavum neriyil pakuththon
maenmai porula thaakath thaeva makaththuvaththin
vilangum anantha sukaththon – akki
yaanath thirul akalaththaan ippuviyil utta
antha mutivillaatha sunthara kiristhunaatha- en

2.mikkap paraaparano tokka ontiththirantha
mukkiyam anaiththum viduththu – aevai
makkal thuyar akalath thukka ulakamathil
manudaavathaaram eduththu
pakshamaaka atimaik kolam konndarum
paadu pattuyir koduththu – narar
akkiramam anaiththum nikkirakam purinthu
anthakaaram ara vantha yaesukiristhu

3.paavath thikil aruththuch,saapaththaiyum tholaiththu
pakainjan vinaiyai neekkik – kodum
aapaththilum, adarntha kopaththilum viluntha
atimaikalaik kaithookki
thaevaththiraviyam enta jeeva pojanaththaith
thiruvula maay unndaakki – niththam
maapaththi ramaayp pirathaapith thanukra kiththu
vaiththuk kaaththa orae niththiya thirithvamaana

PowerPoint Presentation Slides for the song Enthan Parama Guru Seitha – என்தன் பரமகுரு செய்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்தன் பரமகுரு செய்த PPT
Enthan Parama Guru Seitha PPT

நித்திய அனைத்தும் பல்லவி என்தன் பரமகுரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே அனுபல்லவி தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற வஸ்துவான English