Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் உள்ளங் கவரும்

என் உள்ளங் கவரும்

பல்லவி

என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட.

அனுபல்லவி

என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. – என்

சரணங்கள்

1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,
எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. – என்

2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட. – என்

3. உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்;
என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். – என்

4. அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட. – என்

En Ullam Kavarum – என் உள்ளங் கவரும் Lyrics in English

en ullang kavarum

pallavi

en ullang kavarum,-neer mariththa
inpak kurusanntai innum nerungida.

anupallavi

en paavam pokkavae eettiyaal kuththunndu
iraththam, thannnneer valinthodum vilaavanntai. – en

saranangal

1. unthan makaa inpa saththam naan kaettavan,
umathaachchariya anpai unarnthavan,
enthaiyae, naanummaich sernthavanaayinum,
innum nerungi naan ummanntai sernthida. – en

2. suththak kirupaiyin vallamaiyaal ennai
muththiriyum umakkooliyam seythida,
aththanae, ummil nal nampikkaiyaay unthan
siththamae en siththamaakap pilaiththida. – en

3. unthanatithanil urainthu thaniththu
or manni naeram kalippathae paakkiyam;
en thaevanae, athi naesamaay ummudan
inpa sampaashannai seyvathae aanantham. – en

4. amparaa, marana aali thaanndum varai
ariya mutiyaa anpin aalam unndu;
en paranae, unthan anpin aalaththai naan
immaiyil kootiyamattum arinthida. – en

PowerPoint Presentation Slides for the song En Ullam Kavarum – என் உள்ளங் கவரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உள்ளங் கவரும் PPT
En Ullam Kavarum PPT

உந்தன் உள்ளங் இன்ப அன்பின் கவரும் பல்லவி கவரும்நீர் மரித்த இன்பக் குருசண்டை நெருங்கிட அனுபல்லவி பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம் தண்ணீர் வழிந்தோடும் English