என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்
பல்லவி
என் சிலுவை எடுத்து என் இயேசுவே
இச்சணம் பின்னே வாறேன்.
அனுபல்லவி
இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர்
இரட்சகரே! ஏனக்குள்ளயாவும் விட்டு. – என்
சரணங்கள்
1.உலகும்மை விட்டிடினும் – உம தயையால்
உம்மை நான் பின் செல்லுவேன்
அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும்
அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் – என்
2.என்றன் சுதந்தரத்தை – இழக்கினும்
சொந்தம் நீரே எனக்கு
பந்து சனங்களும் பற்றுறு நேசரும்
பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ! – என்
3.பாடுகள் பட்டிடுவேன் – உம்மோடு நான்
பாரநுகஞ் சுமப்பேன்
ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த
அன்பான மேய்ப்பரே ஆடுகளை மேய்ப்பேன். – என்
4.ஆசை மேற்கொள்ள விடேன் – கெட்டலோக
பாசம் அணுகவிடேன்
ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி
மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட. – என்
En Siluvai Eduthu Pinnae Vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் Lyrics in English
en siluvai eduththup pinnae vaaraen
pallavi
en siluvai eduththu en Yesuvae
ichchanam pinnae vaaraen.
anupallavi
innila meethinil enakkaayuyir vittir
iratchakarae! aenakkullayaavum vittu. – en
saranangal
1.ulakummai vittitinum – uma thayaiyaal
ummai naan pin selluvaen
alakai enmael paaynthu athikamaay ethirththaalum
anjaamal porseythu avanai maerkonndu naan – en
2.entan suthantharaththai – ilakkinum
sontham neerae enakku
panthu sanangalum pattutru naesarum
pakaiththup palippin en pangu neerallavo! – en
3.paadukal patdiduvaen – ummodu naan
paaranukanj sumappaen
aadukalukkaaka ariya seevan thantha
anpaana maeypparae aadukalai maeyppaen. – en
4.aasai maerkolla vitaen – kettaloka
paasam anukavitaen
eesan lokaththilentum naesamudanae thangi
maasukalara unthan thaasanaay vilangida. – en
PowerPoint Presentation Slides for the song En Siluvai Eduthu Pinnae Vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் PPT
En Siluvai Eduthu Pinnae Vaarean PPT