Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெத்லகேம் யாத்திரை சென்றே

பெத்லகேம் யாத்திரை சென்றே
பாலகன் இயேசுவைக் கண்டே
ஆனந்தம் அடைந்தே மூவர்
கூறும் அற்புத சாட்சியிதே
அவர் பாதம் நாம் பணிவோம்

நமக்கொரு பாலகன் பிறந்தார்
தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
இருக்கும் கிறிஸ்து மேலானவரே

மேலோக மாளிகையை – விட்டு
பூலோக மண்மனையில்
தூதர் துதி துறந்தே
பசுத்தொட்டில் அவர் படுத்தார்

மன்னுயிர் வாழ்வதற்கே
இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
மானிடமே மகிழ்வாய் -உன்
மனத்துயர் தீர்த்திடுவார்

பாவ சந்தோஷங்களோ
உன்னைபாதாளம் தள்ளிடுமே
இயேசுவின் திருமுகமே – கண்டு
இரட்சிப்பை தேடி நீ வா

வான பிதாவிடமே – உன்னை
விண்ணேசு சேர்த்திடுவார்
ஜீவன் வழி சத்தியம்
நித்ய ஜோதியை பின்பற்றி வா

Bethlehem yathirai senre Lyrics in English

Pethlakaem yaaththirai sente
Paalakan Yesuvaik kanntae
Aanantham atainthae moovar
Kooraுm arputha saatchiyithae
Avar paatham naam pannivom

Namakkoru paalakan piranthaar
Thaeva kumaaran kodukkappattarae
Karththaththuvam avar tholin mael
Irukkum Kristhu maelaanavarae

Maeloka maalikaiyai – vittu
Pooloka mannmanaiyil
Thoothar thuthi thuranthae
Pasuththottil avar paduththaar

Mannuyir vaalvatharkae
Yesu thannuyir thaanam seythaar
Maanidamae makilvaay -un
Manaththuyar theerththiduvaar

Paava santhoshangalo
Unnaipaathaalam thallidumae
Yesuvin thirumukamae – kanndu
Iratchippai thaeti nee vaa

Vaana pithaavidamae – unnai
Vinnnneesu serththiduvaar
Jeevan vali saththiyam
Nithya jothiyai pinpatti vaa

PowerPoint Presentation Slides for the song Bethlehem yathirai senre

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்லகேம் யாத்திரை சென்றே PPT
Bethlehem Yathirai Senre PPT

வா பெத்லகேம் யாத்திரை சென்றேபாலகன் இயேசுவைக் கண்டே ஆனந்தம் அடைந்தே மூவர் கூறும் அற்புத சாட்சியிதே பாதம் பணிவோம் நமக்கொரு பாலகன் பிறந்தார் தேவ குமாரன் English