Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்த நாள் பாக்கிய

பல்லவி

அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அனுபல்லவி

அந்தநாள் ஆனந்தநாள் அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் – அந்த

சரணங்கள்

1. அன்றே எனக்குப் பேதித்தார் – அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர் எங்கும் எடுத்துரைப்பேனே – அந்த

2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் – அந்த

3. ஆறுதல்களால் நிறைந்தேன் – அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் – அந்த

4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் – உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா – அந்த

Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய

Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய Lyrics in English

pallavi

antha naal paakkiya naal – naan meetkappatta
antha naal paakkiya naal

anupallavi

anthanaal aananthanaal arumai iratchakarennai
anpodalaiththenathu asuththangal neekkina naal – antha

saranangal

1. ante enakkup paethiththaar – avar valiyil
anuthinam sellak karpiththaar;
entum avarmael saarnthae inpa jeeviyam seyya
aevinaar en iratchakar engum eduththuraippaenae – antha

2. entanai ante iluththaar- thamathanpinaal
isaivaayth thammudan innaiththaar;
sontham naan avarukkuch sontham avar enakku
intha uruthipannnni iniya aikkiyam petten – antha

3. aaruthalkalaal nirainthaen – alavillaatha
aasikalinaal makilnthaen;
thaarumaaraana ullam maaruthalai yatainthu
maaraatha yaesuvinil makimaiyaayth thangap petten – antha

4. annaalil vaakkup pannnninaen – uruthiyaaka
ennaalum naan puthuppippaen;
sonna ivvaakkai nitham suththamaay niraivaetta
unnatha palam thaaraay ennaiyaatkonnda thaevaa – antha

Antha Naal Bakkiya – antha naal paakkiya

PowerPoint Presentation Slides for the song Antha Naal Bakkiya – அந்த நாள் பாக்கிய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்த நாள் பாக்கிய PPT
Antha Naal Bakkiya PPT

நாள் பாக்கிய அன்றே சொந்தம் பெற்றேன் பல்லவி மீட்கப்பட்ட அனுபல்லவி அந்தநாள் ஆனந்தநாள் அருமை இரட்சகரென்னை அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின சரணங்கள் எனக்குப் பேதித்தார் வழியில் English