Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியை அருளுமேன் சுவாமி

பல்லவி

ஆவியை அருளுமேன் சுவாமி – எனக்காய்
உயிர் கொடுத்த வானத்தின் அரசே!

சரணங்கள்

1. உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி,
ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி,
பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி,
பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி – ஆவியை

2. பாவியை நினைத்து நீர் உருகின ஆவி
பரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி,
ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி,
ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி – ஆவியை

3. பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட ஆவி,
பக்தர்க்குப் புதுப் பெலன் அளித்திட்ட ஆவி,
கல்வாரிப் பாதையில் நடத்திடும் ஆவி,
கர்த்தரே! உம் சித்தம் செய்திடும் ஆவி – ஆவியை

4. பாவத்தை தேவரீர் காண்பதைப் போல,
பரமனே! அடியேனும் தானாகக் காண
தேவ வரமதனை அளித்திடும் ஐயா!
தெளிவுடன் அதை நான் பாவிக்குக் கூற – ஆவியை

5. உலகத்தார் மாண்டு போகிறார் சுவாமி!
உன்னத ஆவி வேண்டுமென் சுவாமி;
மலர்ந்தெங்கள் முகங்களை நோக்குமேன் ஐயா
மழைபோல் ஆவியை வருஷியும் ஐயா! – ஆவியை

Aaviyai Arulumean Swamy – ஆவியை அருளுமேன் சுவாமி Lyrics in English

pallavi

aaviyai arulumaen suvaami – enakkaay
uyir koduththa vaanaththin arase!

saranangal

1. ulakaththai vittu iratchikkum aavi,
oomaiyar vaaykalaith thiranthidum aavi,
parisuththavaankalil vasiththidum aavi,
paavikalaich sirai meetdidum aavi – aaviyai

2. paaviyai ninaiththu neer urukina aavi
paraththai vittup puviyil varach seytha aavi,
aavalaay atiyaenaith thaetina aavi,
aananthak kalippai aliththitta aavi – aaviyai

3. penthekosthenum naalil polinthitta aavi,
paktharkkup puthup pelan aliththitta aavi,
kalvaarip paathaiyil nadaththidum aavi,
karththarae! um siththam seythidum aavi – aaviyai

4. paavaththai thaevareer kaannpathaip pola,
paramanae! atiyaenum thaanaakak kaana
thaeva varamathanai aliththidum aiyaa!
thelivudan athai naan paavikkuk koora – aaviyai

5. ulakaththaar maanndu pokiraar suvaami!
unnatha aavi vaenndumen suvaami;
malarnthengal mukangalai Nnokkumaen aiyaa
malaipol aaviyai varushiyum aiyaa! – aaviyai

PowerPoint Presentation Slides for the song Aaviyai Arulumean Swamy – ஆவியை அருளுமேன் சுவாமி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியை அருளுமேன் சுவாமி PPT
Aaviyai Arulumean Swamy PPT

ஆவி ஆவியை சுவாமி ஐயா அளித்திட்ட பல்லவி அருளுமேன் எனக்காய் உயிர் கொடுத்த வானத்தின் அரசே சரணங்கள் உலகத்தை இரட்சிக்கும் ஊமையர் வாய்களைத் திறந்திடும் பரிசுத்தவான்களில் English