🏠  Lyrics  Chords  Bible 

Thaevaathi Thaevan Piranthida Chords

தேவாதி தேவன் பிறந்திட
அன்று இடம் தர யாரும் இல்லையே
ஆயிரம் இதயம் அவருக்காய் திறந்திருக்குது
தேவ உறவுக்காய்
சத்தியத்தின் தென்றல் நம் இதயத்தில் நுழைந்து
தேவ கீதங்களைப் பாடிடுமே
உன்னத்தின் தேவன் அவர் நேசப் பிள்ளைத் தந்தார்
என தேசம் முழுவதும் கூறிடுவோம்
அமைதியின் விதைகளை விதைப்போம்
எங்கும் மகிழ்ச்சி பூக்களை அறுவடைச் செய்வோம்
–தேவாதி
இதுவரை செய்த நற்கருணையை எண்ணி
தேவனே உம்மைப் போற்றிடுவோம்
தேவன் சொல்லும் வார்த்தை நம் இதயத்தில் ஏற்றி
தேவ ஒளியினில் நடந்திடுவோம்
மலர்ந்திடுமே அவர் அரசு
புவி மகிழ்ந்திடுமே அந்த நாளினைக் கண்டு
—தேவாதி


Thaevaathi Thaevan Piranthida Chords for Keyboard, Guitar and Piano
English