யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
சேலாவின͠சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,
சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.
தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.
ஆசாரியர்களில் யெதாயா, யோயாரிப், யாகின்.
அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.
அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்துஎழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.
பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,
எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
வாசல் காவலாளிகளாகிய சல்லுூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லுூம்.
கோராகின் குமாரனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லுூமும், அவன் பிதாவின் வம்சத்தாராகிய அவனுடைய சகோதரருமான கோராகியர் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தார்கள்.
எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.
அப்படியே அவர்களும், அவர்கள் குமாரரும் கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களைக் காக்கிறவர்களை முறைமுறையாய் விசாரித்து வந்தார்கள்.
வாசல்களைக் காக்கிறவர்கள் நாலுதிசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
blessed And | וַיְבָ֣רֶךְ | waybārek | vai-VA-rek |
God | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
אֶת | ʾet | et | |
Noah | נֹ֖חַ | nōaḥ | NOH-ak |
sons, his | וְאֶת | wĕʾet | veh-ET |
and and | בָּנָ֑יו | bānāyw | ba-NAV |
said fruitful, Be them, | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
unto and | לָהֶ֛ם | lāhem | la-HEM |
multiply, and | פְּר֥וּ | pĕrû | peh-ROO |
replenish | וּרְב֖וּ | ûrĕbû | oo-reh-VOO |
the earth. | וּמִלְא֥וּ | ûmilʾû | oo-meel-OO |
אֶת | ʾet | et | |
הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |