தேவவசனம் துக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.
தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.
Who | ὃς | hos | ose |
gave | ἔδωκεν | edōken | A-thoh-kane |
himself | ἑαυτὸν | heauton | ay-af-TONE |
for | ὑπὲρ | hyper | yoo-PARE |
us, | ἡμῶν | hēmōn | ay-MONE |
that | ἵνα | hina | EE-na |
redeem might he | λυτρώσηται | lytrōsētai | lyoo-TROH-say-tay |
us | ἡμᾶς | hēmas | ay-MAHS |
from | ἀπὸ | apo | ah-POH |
all | πάσης | pasēs | PA-sase |
iniquity, | ἀνομίας | anomias | ah-noh-MEE-as |
and | καὶ | kai | kay |
purify | καθαρίσῃ | katharisē | ka-tha-REE-say |
unto himself | ἑαυτῷ | heautō | ay-af-TOH |
people, peculiar | λαὸν | laon | la-ONE |
a | περιούσιον | periousion | pay-ree-OO-see-one |
zealous | ζηλωτὴν | zēlōtēn | zay-loh-TANE |
of good | καλῶν | kalōn | ka-LONE |
works. | ἔργων | ergōn | ARE-gone |