தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.
தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.
மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்.
அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.
ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.
| And | καί | kai | kay |
| being found | σχήματι | schēmati | SKAY-ma-tee |
| in fashion | εὑρεθείς | heuretheis | ave-ray-THEES |
| as | ὥς | hōs | ose |
| a man, | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
| he humbled | ἐταπείνωσεν | etapeinōsen | ay-ta-PEE-noh-sane |
| himself, | ἑαυτὸν | heauton | ay-af-TONE |
| and became | γενόμενος | genomenos | gay-NOH-may-nose |
| obedient | ὑπήκοος | hypēkoos | yoo-PAY-koh-ose |
| unto | μέχρι | mechri | MAY-hree |
| death, | θανάτου | thanatou | tha-NA-too |
| even | θανάτου | thanatou | tha-NA-too |
| the death | δὲ | de | thay |
| of the cross. | σταυροῦ | staurou | sta-ROO |