Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்த்த நாதருக்கே மங்களம்

உயிர்த்த நாதருக்கே மங்களம்
பல்லவி

சுபஜெய மங்களமே நித்திய சுபஜெய மங்களமே
சுகமே தரவே புவிமீ துயிர்த்தசுதனேசு நாதருக்கே

சரணங்கள்

1.தீர்க்க ருரைத்தனரே-நின்று
ஜேசு உயிர்த்தனரே
ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து
ஜெயமா யெழுந்தவர்க்கே- சுப

2.தூதர் சங்க முழங்க வானம்
ஜோதியினா லிலங்கத்
துரிதாய்ப் பரனார் களிகூர்ந்திடவே
தொனியா யெழுந்தவர்க்கே- சுப

3.அங்கங் குளிர்ந்திடவே உல
கெங்கும் மகிழ்ந்திடவே
அடியாருடசா வுடகூ ரொடித்து
அகில மெழுந்தவர்க்கே.- சுப

4.காலையிலே எழுந்து நிதம்
கர்த்தனையே நினைத்துக்
கரமே குவித்துத் துதிபா டிடவே
காலை யிலெழுந்தவர்க்கே.- சுப

5.ஆனந்தம் பாடிடவும் பரன்
அன்பைக் கொண்டாடிடவும்
அசையா நிலையோ டெழுந்து தொழவே
அருள் கூர்ந்திடு பவர்க்கே- சுப

6.எக்காளமே தொனிக்க பக்தர்
யாவருமே யெழும்ப
இனிதாய் அரசா ளவுமேயுலகில்
எழு மிம்மானு வேலர்க்கே.- சுப

Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம் Lyrics in English

uyirththa naatharukkae mangalam
pallavi

supajeya mangalamae niththiya supajeya mangalamae
sukamae tharavae puvimee thuyirththasuthanaesu naatharukkae

saranangal

1.theerkka ruraiththanarae-nintu
jaesu uyirththanarae
jekathees paranaar suthanaar kiristhu
jeyamaa yelunthavarkkae- supa

2.thoothar sanga mulanga vaanam
jothiyinaa lilangath
thurithaayp paranaar kalikoornthidavae
thoniyaa yelunthavarkkae- supa

3.angang kulirnthidavae ula
kengum makilnthidavae
atiyaarudasaa vudakoo rotiththu
akila melunthavarkkae.- supa

4.kaalaiyilae elunthu nitham
karththanaiyae ninaiththuk
karamae kuviththuth thuthipaa tidavae
kaalai yilelunthavarkkae.- supa

5.aanantham paatidavum paran
anpaik konndaatidavum
asaiyaa nilaiyo delunthu tholavae
arul koornthidu pavarkkae- supa

6.ekkaalamae thonikka pakthar
yaavarumae yelumpa
inithaay arasaa lavumaeyulakil
elu mimmaanu vaelarkkae.- supa

PowerPoint Presentation Slides for the song Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்த நாதருக்கே மங்களம் PPT
Uyirtha Natharukae Mangalam PPT

English