உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோபார்
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே
1. திண்டு போல எண்டிசையின்
தொண்டர் பாவம் ஆண்டான் மேலே
நின்றதே ஓர் பண்டு ஏவை
தின்ற சாபம் மண்டுதே — உருகாயோ
2. தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்! — உருகாயோ
3. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்!
புல்லரிதோ நன்றி கெட்டு
புறம்பாக்கினாரன்றோ! — உருகாயோ
4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனார்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குரு சேறினார்! — உருகாயோ
5. மூவுலகும் தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்! — உருகாயோ
6. நித்திய காலம் பாத்திரராய்
நீசர் வாசஸ்தலம் உய்ய
சத்திய தாசர் சித்தமேவும்
சங்கை ராஜன் இங்கு பார்! — உருகாயோ
Urukaayo Nenjamae Lyrics in English
Urukaayo nenjamae
Kurusinil anthopaar
Karangaalkal aanniyaerith
Thirumaeni naiyuthae
1. Thinndu pola enntisaiyin
Thonndar paavam aanndaan maelae
Nintathae or panndu aevai
Thinta saapam mannduthae — urukaayo
2. Thaakam minji naavaranndu
Thanga maeni manguthae
Aekaparan kannnayarnthu
Eththanaiyaay aenguraar! — urukaayo
3. Valla paeyai vella vaanam
Vittu vantha theyvam paaraay!
Pullaritho nanti kettu
Purampaakkinaaranto! — urukaayo
4. Mannuyirkkaay thannuyirai
Maaykka vantha mannavanaar
Innila mellaam purakka
Eenakkuru serinaar! — urukaayo
5. Moovulakum thaangum Dhevan
Moontu aanni thaangidavo
Saakum vaelai vantha pothu
Siluvaiyil thonginaar! — urukaayo
6. Niththiya kaalam paaththiraraay
Neesar vaasasthalam uyya
Saththiya thaasar siththamaevum
Sangai raajan ingu paar! — urukaayo
PowerPoint Presentation Slides for the song Urukaayo Nenjamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உருகாயோ நெஞ்சமே PPT
Urukaayo Nenjamae PPT

