Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோபார்
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே

1. திண்டு போல எண்டிசையின்
தொண்டர் பாவம் ஆண்டான் மேலே
நின்றதே ஓர் பண்டு ஏவை
தின்ற சாபம் மண்டுதே — உருகாயோ

2. தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்! — உருகாயோ

3. வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்!
புல்லரிதோ நன்றி கெட்டு
புறம்பாக்கினாரன்றோ! — உருகாயோ

4. மன்னுயிர்க்காய் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனார்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குரு சேறினார்! — உருகாயோ

5. மூவுலகும் தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்! — உருகாயோ

6. நித்திய காலம் பாத்திரராய்
நீசர் வாசஸ்தலம் உய்ய
சத்திய தாசர் சித்தமேவும்
சங்கை ராஜன் இங்கு பார்! — உருகாயோ

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Lyrics in English

urukaayo nenjamae
kurusinil anthopaar
karangaalkal aanniyaerith
thirumaeni naiyuthae

1. thinndu pola enntisaiyin
thonndar paavam aanndaan maelae
nintathae or panndu aevai
thinta saapam mannduthae — urukaayo

2. thaakam minji naavaranndu
thanga maeni manguthae
aekaparan kannnayarnthu
eththanaiyaay aenguraar! — urukaayo

3. valla paeyai vella vaanam
vittu vantha theyvam paaraay!
pullaritho nanti kettu
purampaakkinaaranto! — urukaayo

4. mannuyirkkaay thannuyirai
maaykka vantha mannavanaar
innila mellaam purakka
eenakkuru serinaar! — urukaayo

5. moovulakum thaangum thaevan
moontu aanni thaangidavo
saakum vaelai vantha pothu
siluvaiyil thonginaar! — urukaayo

6. niththiya kaalam paaththiraraay
neesar vaasasthalam uyya
saththiya thaasar siththamaevum
sangai raajan ingu paar! — urukaayo

PowerPoint Presentation Slides for the song Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உருகாயோ நெஞ்சமே PPT
Uruguayo Nenjame PPT

உருகாயோ நெஞ்சமே குருசினில் அந்தோபார் கரங்கால்கள் ஆணியேறித் திருமேனி நையுதே திண்டு எண்டிசையின் தொண்டர் பாவம் ஆண்டான் மேலே நின்றதே பண்டு ஏவை தின்ற English