Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் சார்பினில் நடத்தும்

1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி தவறுவோமே,
சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்;
மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்.

2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி கேடு சூழுமே;
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்,
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.

3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி வழி காணோமே;
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்,
உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.

4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே;
காடு மேடான பாதை என்றுமே,
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.

Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும் Lyrics in English

1. um saarpinil nadaththum, thanthaiyae;
um thunnaiyinti thavaruvomae,
santhaekam soolum, thukkam minjidum;
mey vali kiristhumoolam nadaththum.

2. saththiyaththil nadaththum, thanthaiyae;
um thunnaiyinti kaedu soolumae;
vaannaal sittinpa maaykaiyaal kedum,
sattum nampikkaiyatte vaadidum.

3. sanmaarkkaththil nadaththum, thanthaiyae;
um thunnaiyinti vali kaannomae;
kaarmaekam mooti irul sooluvom,
ummaalae sethamintich selluvom.

4. vinn oyvukku nadaththum, thanthaiyae;
kaadu maedaana paathai entumae,
um siththampolae thunpam inpamum
thanthatiyaarai vaanor aakkidum.

PowerPoint Presentation Slides for the song Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் சார்பினில் நடத்தும் PPT
Um Saarbinil Nadathum PPT

உம் நடத்தும் தந்தையே துணையின்றி வழி சார்பினில் தவறுவோமே சந்தேகம் சூழும் துக்கம் மிஞ்சிடும் மெய் கிறிஸ்துமூலம் சத்தியத்தில் கேடு சூழுமே வாணாள் சிற்றின்ப மாய்கையால் English