Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே

பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் — தோத்திரம்

1. அன்னை மரி சுதனை – புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை — தோத்திரம்

2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை — தோத்திரம்

3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி — தோத்திரம்

Thoththiram Seyvaenae Lyrics in English

Thoththiram seyvaenae – ratchakanaith thoththiram seyvaenae paaththiramaakka immaathram karunnaivaiththa paarththipanai yoothak koththiranai, entum — thoththiram 1. Annai mari suthanai – pulmeethu amilthuk kaluthavanai, munnannai meethutta sinnak kumaaranai, munnurai noorpati innilath thuttaோnai — thoththiram 2. Kanthai pothinthavanai – vaanorkalum vanthati pannipavanai, manthaiyark kaanantha maatchiyayaliththonai, vaana paran ennum njaana kunavaanai — thoththiram 3. Sempon nuruvaanaith – thaesikarkal thaedum kuruvaanai, ampara maeviya umpar kanaththodu anpu pera nintu, paim pon malar thoovi — thoththiram

PowerPoint Presentation Slides for the song Thoththiram Seyvaenae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் PPT
Thoththiram Seyvaenae PPT

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் செய்வேனே பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த பார்த்திபனை யூதக் கோத்திரனை தோத்திரம் அன்னை மரி சுதனை புல்மீது அமிழ்துக் கழுதவனை முன்னணை English