தருணம் இதில் அருள் செய்
பல்லவி
தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது
தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன்
அனுபல்லவி
மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து,
வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம்
சரணங்கள்
1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற
ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே,
பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப்[1]
பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர. – தருணம்
2. வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை, விருப்போடு நீர்
வாரும், எனைச்சேரும், என்ற சீரை அறிந்தே ஏழையேன்;
திருத்தமுடன் எனைக்காத்து, நற்கருத்தை அளித்திருத்த அருள்
செய்ய, நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன், ஐயனே. – தருணம்
Tharunam Ithil Arul Sei – தருணம் இதில் அருள் செய் Lyrics in English
Tharunam ithil arul sey pallavi tharunam ithil arul sey, yaesuparanae, paavach sumaiyaanathu thaanga aelaiyaalae ari thaengal ura laanaen anupallavi marana mathin uramae oliththalakaith thiram aravae seythu, vathaiyae vilaiththidu theevinai sithaiya vakai puri, paranae. – tharunam saranangal 1. Ulakar uraு pavamaanathaith thalaimael sumantha thathanai ara olikka, nannpar selikka, vanam thelikka vantha param porulae, pala kaalam ith thalamae oru nilaiyae enap pulamee thunnip[1] paalil ali aelai thanai aalavae ivvaelai vara. – tharunam 2. Varuththa mudan akap paaramae thariththor thamai, viruppodu neer vaarum, enaichchaேrum, enta seerai arinthae aelaiyaen; thiruththamudan enaikkaaththu, narkaruththai aliththiruththa arul seyya, naanum uyyak karunnai peyyak kenjinaen, aiyanae. – tharunam
PowerPoint Presentation Slides for the song Tharunam Ithil Arul Sei – தருணம் இதில் அருள் செய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தருணம் இதில் அருள் செய் PPT
Tharunam Ithil Arul Sei PPT

