Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தந்தானைத் துதிப்போமே திருச்

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே, கவி – பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் – தந்

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் – தந்

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் – தந்

4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை
அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! – தந்

5. சிங்காரக் கன்னிமாரே, – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் – தந

Thanthaanaith Thuthippoemae Lyrics in English

Thanthaanaith thuthippomae – thiruch Sabaiyaarae, kavi – paatippaati. Vinthaiyaay namakkananthananthamaana, villarkariyathor nanmai mika mikath – than 1. Oyyaaraththuch seeyonae – neeyum meyyaakak kalikoornthu naernthu, aiyanaesukkunin kaiyaik kooppith thuthi seykuvaiyae, makil kolluvaiyae, naamum – than 2. Kannnnaarak kaliththaayae – nanmaik kaatchiyaik kanndu rusiththup pusiththu ennnukkadangaatha eththanaiyo nanmai innumunmaer sonaa maaripor peythumae – than 3. Suththaangaththu narSabaiyae – unai muttaாyk kollavae alainthu thirinthu saththuk kulainthunaich saththiyaakkath thammin raththaththaich sinthi eduththae uyir varam – than 4. Thooram thirintha seeyonae – unaith thookkiyeduththuk karaththinilaenthi, aarangal pa+tti alangariththu ninai aththanai manavaatti yaakkinathu ennai! – than 5. Singaarak kannimaarae, – um alangaarak kummi atiththup patiththu, mangaatha um manavaalan yaesuthanai vaalththi vaalththi aeththip panninthidum – thana

PowerPoint Presentation Slides for the song Thanthaanaith Thuthippoemae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தந்தானைத் துதிப்போமே திருச் PPT
Thanthaanaith Thuthippoemae PPT

தந் நன்மை சீயோனே உம் வாழ்த்தி தந்தானைத் துதிப்போமே திருச் சபையாரே கவி பாடிப்பாடி விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் மிகத் ஒய்யாரத்துச் நீயும் மெய்யாகக் களிகூர்ந்து English