1.தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும்
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே, பாவக் குற்றத்தை
நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.
2.மன்னிப்பை எவனானிலும்
தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை யாவரும்
தாழ்வான மனத்தாலே
பணிந்து பயப்படவே,
மனத்தரிதிரருக்கே
மன்னிக்கிறீர், கர்த்தாவே.
3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன்,
என் புண்ணியம் அவத்தம்;
தெய்வன்பையே நான் நம்புவேன்;
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேதவார்த்தையில்
உண்டாமே, நான் என்மனத்தில்
அதற்குக் காத்திருப்பேன்.
4.ராச்சாமங் காப்பவர், எப்போ
விடியும் என்பதாக
நிற்க, என் மனமே, நீயோ
அதிக ஆவலாகக்
கர்த்தாவை நோக்கிக்காத்திரு;
ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக்
காத்தே இரு, ரட்சிப்பார்.
5.என் பாவம் பெரிதாகிலும்
தெய்வன் பதிகமாமே;
கேடெத்தனை பெருகியும்;
மீட்பதற்கும் பெரிதே,
ஆ,இஸ்ரவேலின் பாவங்கள்
அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்.
Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் Lyrics in English
1.thaalvilirunthu kooppidum en saththang kaettanpaaka en alukai anaiththukkum sevi koduppeeraaka; karththaavae, paavak kuttaththai neer manniyaamal, neethiyaip paarththaal yaar nirkakkoodum. 2.mannippai evanaanilum than punnnniyangalaalae ataiyaan; ummai yaavarum thaalvaana manaththaalae panninthu payappadavae, manaththarithirarukkae mannikkireer, karththaavae. 3.naan karththaraik kannnnokkuvaen, en punnnniyam avaththam; theyvanpaiyae naan nampuvaen; atharku vaakkuththaththam meyyaana vaethavaarththaiyil unndaamae, naan enmanaththil atharkuk kaaththiruppaen. 4.raachchaாmang kaappavar, eppo vitiyum enpathaaka nirka, en manamae, neeyo athika aavalaakak karththaavai Nnokkikkaaththiru; aa, isravaelae, svaamikkuk kaaththae iru, ratchippaar. 5.en paavam perithaakilum theyvan pathikamaamae; kaedeththanai perukiyum; meetpatharkum perithae, aa,isravaelin paavangal athaiththum neekkum meetkuthal karththaavinaalae aakum.
PowerPoint Presentation Slides for the song Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாழ்விலிருந்து கூப்பிடும் PPT
Thaalvilirunthu Koopidum PPT

