Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

பல்லவி

சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்.

அனுபல்லவி

1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்
செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்
மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந்

2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்
காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி
சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந்

3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது
தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட்
டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந்

4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர்
மகிமை ஜோதிமய மாகுமாலயம்;-மெய்ஞ்
ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம். – சிந்

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில் Lyrics in English

pallavi

sinthaiyudan theyvaalayanthanil servom,-thiri
yaekarin thiruththaal pottiyae kalikoorvom.

anupallavi

1. theyvaniraiyulla yaesu seertheyvaalayam;-avar
settalar itiththumae siranthavaalayam;-thamin
meyppala naliththu nammai meetkumaalayam – sin

2. karththanaippitiththon jeeva katteyvaalayam;-enthak
kaalamum thuthimulangum kaana vaalayam;-pari
suththamaayththanaiyae kaakkum thunga vaalayam – sin

3. thivyapakthar koottamae singaaravaalayam;-athu
theyva aavi sirpi vaelai seyyumalaayam;-theet
davviyam pakaivilakkum anpinaalayam. – sin

4. vaanamae thaevaattukkutti vaalumaalayam;-pakthar
makimai jothimaya maakumaalayam;-meynj
njaanapaakkiyangal peyyum naatharaalaayam. – sin

PowerPoint Presentation Slides for the song Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிந்தையுடன் தெய்வாலயந்தனில் PPT
Sinthaiyudan Deivalayanthanil PPT

English