மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில்,
வெகுதூரம் இருப்பதுபோல
என் பாவங்கள் யாவையும்,
என்னை விட்டு நீக்கினீரே,
பூமிக்கும் வானுக்கும் இடையில்,
வெகு உயரம் இருப்பதுபோல,
உம்மில் பயந்தவர்கள் மேல்,
உம் கிருபை பெரியதே,
உம் தயவை எண்ணி நினைப்பேன்,
என்னை காப்பவர் நீர் என்று துதிப்பேன்,
உம் அன்பை கண்டேன்,
என்னில் உணர்ந்தேன்,
என் இதயம் வென்றீரே.
நீர் என்னை நடத்தும்,
உம் வழியில் பின் செல்வேன்,
உம் அன்பிற்காக நான்,
தினம் நன்றி சொல்கின்றேன் (2)
என் ஜீவனை அழிவிற்கு விளக்கி,
இரக்கங்களினால் முடிசூட்டி,
நன்மையினால் நிறைத்து,
என்னை திருப்தியாக்குகின்றீர்,
என் வயதை கழுகுக்கு சமமாய்,
புது பெலனை அடைவது போல,
நான் இழந்த என் பெலனை
நீர் திரும்ப தந்தீரே,
என் உருவம் மண் என்று அறிந்தேன்,
வாழ் நாட்கள் சிறிதென உணர்ந்தேன்,
உம் நீதியை தேடுவேன்,
உம் வார்த்தையை நாடுவேன்,
என் யாவுமானவரே
என் நினைவின் அருவருப்பெல்லாம்,
என் கண்ணின் இச்சைகளெல்லாம்,
முள் கிரீடங்களாக, உம் சிரசில் சுமந்தீரே,
என் மனதின் வழியாய் சென்றேன்,
அதன் விளைவாய் சாபத்தைச் சுமந்தேன்,
என் ஜீவனை மீட்க,
உம் ஜீவன் தந்தீரே,
நான் உம்மை எப்படி மறவேன்,
என் மீட்பர் நீர் என்று சொல்வேன்.
நான் இருக்கும் விதமாய்,
என்னை ஏற்றுக்கொண்டீர்,
உம் அன்பை பாடிடுவேன்
என் நேசரே என் பிரியரே,
என்னில் உம்மை காண்கின்றேன்,
என் வாழ்வினில் இப்போது
நான் அர்த்தம் காண்கின்றேன் (2)
Shadrack Immanuel Ranjan Lyrics in English
maerkirkum kilakkirkum itaiyil,
vekuthooram iruppathupola
en paavangal yaavaiyum,
ennai vittu neekkineerae,
poomikkum vaanukkum itaiyil,
veku uyaram iruppathupola,
ummil payanthavarkal mael,
um kirupai periyathae,
um thayavai ennnni ninaippaen,
ennai kaappavar neer entu thuthippaen,
um anpai kanntaen,
ennil unarnthaen,
en ithayam venteerae.
neer ennai nadaththum,
um valiyil pin selvaen,
um anpirkaaka naan,
thinam nanti solkinten (2)
en jeevanai alivirku vilakki,
irakkangalinaal mutisootti,
nanmaiyinaal niraiththu,
ennai thirupthiyaakkukinteer,
en vayathai kalukukku samamaay,
puthu pelanai ataivathu pola,
naan ilantha en pelanai
neer thirumpa thantheerae,
en uruvam mann entu arinthaen,
vaal naatkal sirithena unarnthaen,
um neethiyai thaeduvaen,
um vaarththaiyai naaduvaen,
en yaavumaanavarae
en ninaivin aruvaruppellaam,
en kannnnin ichchaைkalellaam,
mul kireedangalaaka, um sirasil sumantheerae,
en manathin valiyaay senten,
athan vilaivaay saapaththaich sumanthaen,
en jeevanai meetka,
um jeevan thantheerae,
naan ummai eppati maravaen,
en meetpar neer entu solvaen.
naan irukkum vithamaay,
ennai aettukkonnteer,
um anpai paadiduvaen
en naesarae en piriyarae,
ennil ummai kaannkinten,
en vaalvinil ippothu
naan arththam kaannkinten (2)
PowerPoint Presentation Slides for the song Shadrack Immanuel Ranjan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில், PPT
Merkirkum kizhakirkum idayil, PPT

