Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

செல்லுவோம் வாரீர்

செல்லுவோம் வாரீர் – selluvom vareer

செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்

1.சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற – ஆகலத்தைப் பார்க்க – செல்

2.ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து
கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்

3.மூங்கில் தடியாலே – ஓங்கியே அடிக்க
ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்

4.சத்துருவின் கையில் – உற்ற ஆட்டை மீட்க
மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்

5.கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற
அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்

6.பாவவினைபோக – தேவ தயவாக
ஜீவ பலியான – இயேசையனைப் பார்க்க – செல்

7.நித்திய சாவின் கூரை – பக்தி தேகத்தேற்று
வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்

8.கடனாளிகட்குப் – பிணையாளியாக
உடலுயி ரீந்த – உன்னதனைப் பார்க்க – செல்

9.பிடித்து உதைத்து – இடித்து வதைத்து
அடிக்கப்படும் நல் – ஆட்டுக்குட்டியைப் பார்க்க – செல்

செல்லுவோம் வாரீர் – Selluvom Vareer Lyrics in English

Selluvom vaareer – selluvom vareer selluvom vaareer! Siluvaiyatiyil 1.sollariya naathan – suya sori sinthi allarpadukinta – aakalaththaip paarkka – sel 2.onnmuti mannanaar -munnmutithariththu kannmayangith thongum – kaatchiyaip paarkka – sel 3.moongil thatiyaalae – ongiyae atikka aengiyae thaviththa – iyaesaiyanaip paarkka – sel 4.saththuruvin kaiyil – utta aattaை meetka meththap paadupatta – nalmaeyppanaik kaana – sel 5.kirupaasanaththil- kuruthiyodu senta arumaip pirathaana – aasaariyanaip paarkka – sel 6.paavavinaipoka – thaeva thayavaaka jeeva paliyaana – iyaesaiyanaip paarkka – sel 7.niththiya saavin koorai – pakthi thaekaththaettaு vettipetta Yesu – maesiyaavaip paarkka – sel 8.kadanaalikatkup – pinnaiyaaliyaaka udaluyi reentha – unnathanaip paarkka – sel 9.pitiththu uthaiththu – itiththu vathaiththu atikkappadum nal – aattukkuttiyaip paarkka – sel

PowerPoint Presentation Slides for the song செல்லுவோம் வாரீர் – Selluvom Vareer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download செல்லுவோம் வாரீர் PPT
Selluvom Vareer PPT

செல் பார்க்க செல்லுவோம் வாரீர் இயேசையனைப் selluvom vareer சிலுவையடியில் சொல்லரிய நாதன் சுய சோரி சிந்தி அல்லற்படுகின்ற ஆகலத்தைப் ஒண்முடி மன்னனார் முண்முடிதரித்து கண்மயங்கித் English