Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்,
தோன்றும் ஒலிவடி வாரம்,-போக
வேண்டும் அரைமைல் தூரம்,-நடு
ராவினில்பதி னோரொருவரோடு
ஏகினார் கெத்செ மேனே நோக்கியே,
நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே
வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ
ரைத்துணை கொண்டாரந் நேரம்.

2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில்
நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர்
கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும்
சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே,
சக்தி முற்றிலும் அற்றுப்போகவே,
சாடினார் முகம் குப்புறத்தூளிலே
சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து
தேற்றினான் அங்கொரு தூதன்.

3. சொல்லாலே உல கங்கள் படைத்தவன்
சோர்கின்ற வாதையைப் பாரும்!-திகில்
துக்கம் வியாகுலச் சீரும்!-அன்று
பேய்க்கணங்களும் ஓடிடக் கடல்
கோஷ்டமுற்றிலு மாறிடப், புகழ்
பெற்றவன் கொடும் வாதைக்குள்ளாவதின்
காரணமென்ன சொல் வீரே!-அவர்
பேரில் விஸ்வாசம் வைப் பீரே.

4. அப்பா, என்னரு மைப்பிதாவே! உன்றன்
சித்தமே என் முழுப் பாக்யம்;-அதே
நித்தமும் என் தியான வாக்யம்;-திரள்
அந்தகாரமும் மாந்தர் பாவமும்
நிந்தையாகவே வந்துமோதினும்
கொஞ்சமும் மனம் மாறுவேனோ? இங்கே
வந்ததினால் என்ன லாபம்?-நரர்
எந்தவிதம் தீர்ப்பார் பாவம்?

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel Lyrics in English

1. saalae maanakar geel veethivanthathum,
thontum olivati vaaram,-poka
vaenndum araimail thooram,-nadu
raavinilpathi nororuvarodu
aekinaar kethse maenae Nnokkiyae,
nantena vettup paeraip piriththangae
vaiththaarae thottaththin oram,-moova
raiththunnai konndaaran naeram.

2. kalleri thooram sentu mulangaalil
nintu ookka jepam seyya,-thuyar
konndu raththa vaervai peyya,-perum
saththaththodu kann nneerum pongavae,
sakthi muttilum attuppokavae,
saatinaar mukam kuppuraththoolilae
saattavum koodumo naathan?-vanthu
thaettinaan angaொru thoothan.

3. sollaalae ula kangal pataiththavan
sorkinta vaathaiyaip paarum!-thikil
thukkam viyaakulach seerum!-antu
paeykkanangalum otidak kadal
koshdamuttilu maaridap, pukal
pettavan kodum vaathaikkullaavathin
kaaranamenna sol veerae!-avar
paeril visvaasam vaip peerae.

4. appaa, ennaru maippithaavae! untan
siththamae en mulup paakyam;-athae
niththamum en thiyaana vaakyam;-thiral
anthakaaramum maanthar paavamum
ninthaiyaakavae vanthumothinum
konjamum manam maaruvaeno? ingae
vanthathinaal enna laapam?-narar
enthavitham theerppaar paavam?

PowerPoint Presentation Slides for the song சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் – Salae Managar Kzeel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் PPT
Salae Managar Kzeel PPT

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் தோன்றும் ஒலிவடி வாரம்போக அரைமைல் தூரம்நடு ராவினில்பதி னோரொருவரோடு ஏகினார் கெத்செ மேனே நோக்கியே நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே English