Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சிப்பைக் கொண்டு

1. இரட்சிப்பைக் கொண்டு
உச்சிதப் பட்டணம்
பட்சமுடன் செல்லுவோம் – அங்கே
பரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம்
பரமனுதவியாலே -இர

2. உலகத்தின் வாழ்வை
பொய்யென்று விட்டு
பரமன் பதத்தைத் தொட்டு – என் ஐயா
பாக்கியம் பெற்றேன்; பாவத்தை விட்டேன்
பரிசுத்தன் பலத்தாலே -இர

3. மறையோனை வெறுத்து
பாவத்தைத் தொடுத்து
மாய வலையிலுட்பட்டு – என் ஐயா
மயங்கித் திரிந்தேன், மருள விழுந்தேன்
மன்னித்துக் கொண்டாரே -இர

4. பாவத்தைச் செய்து
காலத்தைக் கழித்தால்
சாபத்துள்ளாவீரே! – என் ஐயா
பாவத்தின் சம்பளம் மரண மென்றறிந்து
பற்றிடும் ஜீவன் இன்று! -இர

5. இயேசுவின் அழைப்பை
காதினாற் கேட்டும்
கடினமானாலுள்ளம் – பாவி
தப்புவாயோ நீ? தண்டனை அடைவாய்!
தற்பரன் கரத்தாலே -இர

Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு Lyrics in English

1. Iratchippaik konndu uchchithap pattanam patchamudan selluvom – angae paralokap pangai pangittuk kolvom paramanuthaviyaalae -ira 2. Ulakaththin vaalvai poyyentu vittu paraman pathaththaith thottu – en aiyaa paakkiyam petten; paavaththai vittaேn Parisuththan palaththaalae -ira 3. Maraiyonai veraுththu paavaththaith thoduththu maaya valaiyilutpattu – en aiyaa mayangith thirinthaen, marula vilunthaen manniththuk konndaarae -ira 4. Paavaththaich seythu kaalaththaik kaliththaal saapaththullaaveerae! – en aiyaa paavaththin sampalam marana mentarinthu pattidum jeevan intu! -ira 5. Yesuvin alaippai kaathinaar kaettum katinamaanaalullam – paavi thappuvaayo nee? Thanndanai ataivaay! Tharparan karaththaalae -ira

PowerPoint Presentation Slides for the song Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சிப்பைக் கொண்டு PPT
Ratchippai Kondu PPT

இர ஐயா இரட்சிப்பைக் உச்சிதப் பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் பரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம் பரமனுதவியாலே உலகத்தின் வாழ்வை பொய்யென்று பரமன் பதத்தைத் தொட்டு பாக்கியம் English