பல்லவி
போசனந்தா னுமுண்டோ-திருராப்
போசனம் போலுலகில்?
அனுபல்லவி
ராசரும் வையக நீசரும் அம்பரன்
நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் – போசனம்
1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;
கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்;
பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;
பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். – போசனம்
2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;
பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;
ஓர் காலமும் குறைவாகாத போசனம்;
ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். – போசனம்
3. பஸ்காப் பலியின்பொருள் என்னும் போசனம்;
பாவி புசிக்கும் சமாதான போசனம்;
நிஷ்கார நிந்தைப் பவம்போக்கும் போசனம்;
நின்மலன் தந்திடும் அற்புதப் போசனம். – போசனம்
4. மாமலைப் பீடப் பலியான போசனம்;
மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்;
ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்;
அத்தனார் மெய்மொழியாலான போசனம். – போசனம்
5. மாமிசம் அப்பத்தோடே வரும் போசனம்;
வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்;
பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்;
பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம். – போசனம்
6. ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்;
ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்;
தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்;
சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம். – போசனம்
7. செத்தும் உயிரோ டெழும்பிடும் போசனம்;
சீவனோ டென்றென்றும் வாழ்விக்கும் போசனம்;
நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்;
நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம். – போசனம்
Posanam Unndo – போசனம் உண்டோ Lyrics in English
Pallavi
Posananthaa numunntoo-thiruraap
Posanam polulakil?
Anupallavi
Raasarum vaiyaka neesarum amparan
Naesarum yaesuvin thaasarum unntidap – posanam
1. Karththan maranaththin saasana posanam;
Kanmi kat kaanamey naesaththin posanam;
Paktharai yontay innaiththidum posanam;
Panjakaalaththum kitaiththidum posanam. – posanam
2. Poorva aerpaattaோrkal kaannaatha posanam;
Pon vaanathootharum unnnnaatha posanam;
Or kaalamum kuraivaakaatha posanam;
Oppillaan maamisam raththamaam posanam. – posanam
3. Paskaap paliyinporul ennum posanam;
Paavi pusikkum samaathaana posanam;
Nishkaara ninthaip pavampokkum posanam;
Ninmalan thanthidum arputhap posanam. – posanam
4. Maamalaip peedap paliyaana posanam;
Maanida njaanaththuk kettatha posanam;
Amenraு naangal pothiththidum posanam;
Aththanaar meymoliyaalaana posanam. – posanam
5. Maamisam appaththotae varum posanam;
Vallan raththan rasaththoduraுm posanam;
Poomiyil motcham konarnthidum posanam;
Poyk kiristhorkaluk kaakkinaip posanam. – posanam
6. Oppanai yennak koodaathameyp posanam;
Ontu mattaொntaka maaraatha posanam;
Thappara naangal pusiththidum posanam;
Santhoshap paavap poraுppeeyum posanam. – posanam
7. Seththum uyiro delumpidum posanam;
Seevano dententum vaalvikkum posanam;
Niththamunndaalum salikkaatha posanam;
Naesa sanjaீvi yenunthirup posanam. – posanam
PowerPoint Presentation Slides for the song Posanam Unndo – போசனம் உண்டோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download போசனம் உண்டோ PPT
Posanam Unndo PPT

