Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிதா அன்புச் செல்வன்

Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil

பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான்
பிறை ஒளி முன்னணை புரண்டதே

தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன்
தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் — பிதா

1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள்
ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள்
ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி
ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் — தாழ்மை

2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை
கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர்
கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம்
கசிந்துருக கோடி துயர் சுமப்பான் — தாழ்மை

3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர்
கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி
தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில்
துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு — தாழ்மை

4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர்
புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம்
பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன்
பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் — தாழ்மை

Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன் Lyrics in English

Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil pithaa anpuch selvan poomiyilae vaan pirai oli munnannai puranndathae thaalmaiyulla ithayaththilae thanayan thavalkiraan avan tharanni meela aaruyiraith thaanam tharukiraan — pithaa 1. Oli pooch soriyum ithayaththilae nadappaan arul oti varum kadamaikalil valarvaan irul olinthoda sudar oliyaay olirvaan vali ottaுmaiyil arakkadalaay nilaippaan — thaalmai 2. Kani kadalaaka aaviyinaal tharuvaan pakai kalainthoda amuthamoli arulvaan pirar kaninthuyara udalaavi koduppaan manam kasinthuruka koti thuyar sumappaan — thaalmai 3. Kadal uppaaka vaalnthuvitil inpam pirar kanndu vara olippaathai elumpum vili thoonndum panni amaithiyun sirippu athil thulanga varum thooyonin ratchippu — thaalmai 4. Puvi pullarellaam maatti vidum punithan valar puthu malaraay pooththa theyva manithan ulam poompolilaay maatta vantha komaan thaen poonguyilaay aram paadum poomaan — thaalmai

PowerPoint Presentation Slides for the song Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிதா அன்புச் செல்வன் PPT
Pitha Anbu Selvan PPT

தாழ்மை பிதா ஒளி இதயத்திலே பிறர் Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை English