பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்
2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்
3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே
4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் – இங்கு
ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்
5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே
Peththalaiyil Piranthavarai Lyrics in English
Peththalaiyil piranthavaraip pottith thuthi manamae – innum 1. Saruvaththaiyum pataiththaannda saruvavallavar – ingu thaalmaiyulla thaaymatiyil thalaisaaykkalaanaar 2. Singaasanam veettirukkum thaevamainthanaar – ingu pangamutta pasuththottilil paduththirukkiraar 3. Munpu avar sonnapati mutippatharkaaka – ingu motcham vittuth thaalchchiyulla munnannaiyilae 4. Aavikalin pottaுthalaal aananthangaொnntoor – ingu aakkalada saththaththukkul aluthu piranthaar 5. Inthataivaay anpu vaiththa emperumaanai – naam ennnamudan poyththuthikka aekiduvomae
PowerPoint Presentation Slides for the song Peththalaiyil Piranthavarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்தலையில் பிறந்தவரைப் PPT
Peththalaiyil Piranthavarai PPT

